700 கோல்கள் – அர்ஜெண்டினாவின் லயொனல் மெஸ்சி சாதனை!

பார்சிலோன்: தற்போது ‘லா லிகா’ உள்ளூர் கிளப் போட்டியில் ஆடிவரும் அர்ஜெண்டினாவின் லயொனல் மெஸ்சி, மொத்தம் 700 கோல்கள் என்ற சாதனை இலக்கை எட்டியுள்ளார்.

இதில், இவர் தனது சொந்த நாட்டு அணிக்காக அடித்த கோல்களின் எண்ணிக்கை 70. ஆடிய போட்டிகள் 138. பார்சிலோனா அணிக்காக இவர் மொத்தமாக அடித்த கோல்களின் எண்ணிக்கை 630. மொத்தப் போட்டிகளின் எண்ணிக்கையோ 724.

இதன்மூலம் இவர் மொத்தமாக 700 கோல்கள் என்ற சாதனையை செய்துள்ளார். இந்த ‘லா லிகா’ தொடரில் மட்டும் இவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 22. லா லிகா தொடர்களில் மட்டும் இவர் மொத்தமாக 441 கோல்களை அடித்துள்ளார்.

பார்சிலோனா – அத்லெடிகோ மேட்ரிட் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 1 கோல் அடித்ததன் வாயிலாக இவர் இந்த இலக்கை எட்டினார். அதேசமயம், இவர் இடம்பெற்றுள்ள பார்சிலோன அணி, இத்தொடரில் 70 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தில் மட்டுமே உள்ளதால், கோப்பை வெல்வது சந்தேகமாகவே உள்ளது.