ஸ்வீட் சாப்பிடும் போட்டியில் மூச்சுத்திணறி உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்!

பாரம்பரிய இனிப்புப் பண்டத்தை யார் அதிகம் சாப்பிடுவது என்ற போட்டியில் கலந்துகொண்ட தென் அமெரிக்காவின் புகழ்மிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மரியோ மெலொ மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

exboxer

குத்துச்சண்டை வீரர் மரியோ மெலொ உயிரிழந்ததை நேற்று (திங்கள்கிழமை) அவரது சகோதரி ஆயிதா மெலொ அறிவித்தார். அர்ஜெண்டினாவில் ‘மிடியாலுனா’ எனப்படும் பாரம்பரிய இனிப்புப் பண்டத்தை சாப்பிடும்போட்டி நடைபெற்றது. இதில் போட்டியாளராக பங்கேற்ற தனது சகோதரர் மூச்சுத்திணறி விழுந்துவிட்டதாக உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஆயிதா தெரிவித்துள்ளார்.

மேலும், “ அவர் எப்போதும் தனது நகைச்சுவையால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கக்கூடியவர் என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால் போட்டியின்போது திடீரென உதவிவேண்டி போட்டி நடத்துபவரிடம் கோபமாக சைகை செய்துள்ளார். இறுதியாக பார்வையாளர்களிடம் இருந்து ஒரு மருத்துவர் வரவழைக்கப்பட்டார், அதன்பின்னர் மரியா மெலோ உள்ளூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர். சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரியோ இறந்தார் “ என அவரது சகோதரி ஆயிதா கூறினார்.

போட்டி ஆரம்பிப்பதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டிருந்த அர்ஜெண்டினாவின் பாரம்பரிய ஸ்வீட் ‘மிடியாலுனா’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப்பண்டத்தை சாப்பிடும் போட்டியில் பங்கேற்று உயிரிழந்த மரியோ மெலோ, 1980 களில் ஹெவி வொயிட் சாம்பியனாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.