மதுரை:

மிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கறிஞர்கள் உண்ணா விரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மதுரை காலவாசலில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 9 பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று ஆறாவது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்து வருகிறது.

தமிழக நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தாய்மொழியான தமிழை அறிவிக்கக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை சந்தித்து ஆதரவு தெரித்துள்ள சீமான் கூறும்போது,

‘உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களின் மொழி அங்குள்ள உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.