பெட்ரோல் விலை ஏற்றம் : வாதங்களும் உண்மைகளும்
டில்லி
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் குறித்த வாதங்களும் உண்மைகளும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன
பெட்ரோல் மற்றும் டிசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது தினமும் ஒரு புது உச்சத்தை எட்டி வருகிறது. இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்ஹ அரசின் கலால் வரியை குறைக்கலாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்த யோசனையை அரசு கருத்தில் கொள்ள வில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்துக்கு முந்தைய அரசே காரணம் என ஒரு வாதம் உள்ளது. இது குறித்து இப்போது பார்ப்போம்
முதல் வாதம் :
ஈரானுக்கு இந்தியா தரவேண்டிய ரூ. 42000 கோடி கடனை முந்தைய அரசு திருப்பி செலுத்தாமல் இருந்தது.
உண்மை :
கடந்த 2013-16 வருடம் வரை ஈரானுக்கு இந்தியா தரவேண்டிய பாக்கி தொகை ரூ. 43000 கோடி ஆகும். கடந்த 2013க்கு முன்னால் இந்திய ரூபாயில் தொகை செலுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு மேற்கத்திய நாடுகளின் பொருளாதார கொள்கை காரணமாக செலுத்த முடியாமல் போனது. இவை அனைத்தும் பாஜக ஆட்சியில் நிகழ்ந்தவைகள் ஆகும்.
இந்த தடை கடந்த 2016 ஆம் வருடம் மாற்றப்பட்டது. மோடியின் ஈரான் பயணத்தினால் இவ்வாறு நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த தடை மாற்றம் ஏற்பட்டதற்கு பிறகே மோடி அங்கு சென்றார். அவர் முன்பே இது குறித்த நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த அளவு கடன் தொகை அதிகரித்திருக்காது.
இரண்டாம் வாதம் :
முந்தைய அரசு நிறைய மானியங்கள் அளித்ததால் நாட்டின் நிதிநிலமை சீர் கெட்டுள்ளது.
உண்மை :
மானியங்கள் அதிகம் அளிப்பதால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படுமா வளர்ச்சி அடையுமா என்பது விவாதத்துக்குரியது. மானியம் அளிப்பது என்பது பலரது துயர் துடைக்கும் செயல் என்றாலும் மக்களால் விளைவுகளை புரிந்துக் கொள்ள இயலாத சூழல் உண்டாவது உண்மை தான். மானியம் என்பது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே. இவ்வகையில் முந்தைய அரசு மானியம் அளித்ததை குறை கூறும் தற்போதைய அரசும் மானியங்கள் வழங்குவதை மேலும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் வாக்கு வங்கியை அதிகரிக்கலாம் என்னும் நோக்கில் அனைத்து கட்சிகளும் செயல்படுகின்றன.
கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கையின் படி கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து மானியங்கள் அளிப்பது அதிகரித்து வருகிறது. உலகில் பல நாடுகளில் இந்தியாவை விட குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த நாடுகளில் இந்தியா வழங்குவது போல் மானியம் வழங்கப்படுவதில்லை. மத்திய பாஜக அரசு மானியத்தை அதிகரிப்பதால் எரிபொருள் விலையையும் அதிகரிக்க உதவி வருகிறது.
வாதம் 3 :
முந்தைய அரசு ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு வாராக்கடனை அளித்துள்ளது.
உண்மை :
இது ஊடகங்களின் தவறான தகவல் ஆகும். இது குறித்த உண்மை தகவலை பிரதமரின் அதிகார இணைய பக்கம் வெளியிட்டது. அதன் பிறகு அதை பாஜக மற்றும் பல மத்திய அமைச்சர்களும் வெளியிட்டனர். அதில், ”மத்திய அரசின் திவால் சட்டத் திருத்தத்தினால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் மூலம் மொத்தம் உள்ள ரூ. 9 லட்சம் வாராக்கடன்களில் ரு. 4 லட்சம் கோடி வாராக் கடன் வசூல் ஆகி உள்ளது. இதில் முந்தைய அரசு அளித்த அனைத்து வாராக்கடன்களும் திரும்ப வந்துள்ளன. ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் முந்தைய அரசு அளித்த அனைத்து வாராக்கடன்களும் திரும்ப வந்துள்ளதை பாஜக அரசே ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.