பாகிஸ்தான் அதிபராக ஆரிப் ஆல்வி பதவி ஏற்பு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் 13வது அதிபராக ஆரிப் ஆல்வி பதவியேற்றார்.
பாகிஸ்தான் அதிபராக இருந்த மம்னூன் ஹூசைனின் பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து தேர்தல் நடந்தது.
இதில், பிரதமர் இம்ரான் கான் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆரிப் ஆல்வி வெற்றி பெற்றார். இதனையடுத்து அதிபர் மாளிகையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆரிப் ஆல்வி அதிபராக பதவியேற்று கொண்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷாகிப் நிசார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இம்ரான் கான், ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் பல நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர்.