அரியலூர்,

ரியலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் லட்சுமிபிரியா வயிற்று வலி காரணமாக அரியலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு வெற்றிகரமாக குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட கலெக்டரே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் தனியார் சொகுசு மருத்துவமனையை நோக்கி செல்லும்வேளையில், தற்போது ஒருசில அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர்.

இதற்கு உதாரணமாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், கம்யூனிஸ்டு தலைவர்கள், நல்லக்கண்ணு, பாண்டியன் போன்றோர் அரசு மருத்துவமனையையே நாடி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமிப்பிரியா வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். அதையடுத்து, அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

அதையடுத்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு  நேற்றிரவு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் ஒருவர், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை நாடாமல்,  அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பது அப்பகுதி  மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

இதேபோல் நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றால் அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.