அரியலூர் நந்தினி கொலை: மணிகண்டனுக்கு குண்டாஸ்…

அரியலூர்,

ரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூரில் கடந்த ஜனவரி 14ம் தேதி தலித் பெண் நந்தினி  பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தந்தை இல்லாததால் சித்தால் வேலைக்கு சென்றுகொண்டிருந்த நந்தினியை காதலிப்பதாக ஏமாற்றி உறவுகொண்ட மணிகண்டன், பின்னர் திருமணம் செய்ய மறுத்து,  நந்தினியை கடத்திச் சென்று  நண்பர்கள் சேர்ந்து கூட்டாக கற்பழித்து கொலை செய்தனர்.

இந்த  வழக்கு காரணமாக  இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.  இதற்கான உத்தரவை கலெக்டர் சரவண வேல்ராஜ் பிறப்பித்துள்ளார்.

இந்த கொலைக்கு காரணமான  இந்துமுன்னணி நிர்வாகியை கைது செய்யகோரி போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.