ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் பற்றிய சிறப்பு தகவல்…..!

--

தர்பார் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர்.

2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை.

தற்போது படத்தில் நடிகர் அர்ஜெய் இணைந்துள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இச்செய்தியை உறுதி படுத்தும் விதத்தில், அர்ஜெய் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று செய்துள்ளார்.