கைதி படத்தின் வில்லன் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கைதி படத்தில் வில்லன் அர்ஜூன் தாஸ் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அப்படத்தை விக்னராஜன் இயக்குகிறார்.

அந்தகாரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தயாரிப்பது அட்லீ. ஏஃபார் ஆப்பிள் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி முதல் படமாக இதை தயாரிக்கவுள்ளார்.

சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகவுள்ள இந்த படத்தில் அர்ஜூன் தாஸ்ஸுடன் வினோத் கிஷன், பூஜா, குமார் நடராஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.