‘மாஸ்டர்’ ட்ரெய்லர் மரண மாஸா இருக்கு : அர்ஜுன் தாஸ்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த படம் கொரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது .

ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் மாஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு போய்விடுமோ என்று பேச்சு கிளம்பியது.

தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், தற்போது ‘மாஸ்டர்’ பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியிடப்படும் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்ததால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் பதிலளித்துள்ளார் .

மாஸ்டர் ட்ரெய்லரை ஆறு முறை பார்த்து விட்டேன். ட்ரெய்லர் மரண மாஸாக உள்ளது. தேதி முடிவுசெய்யப்பட்டது ட்ரெய்லர் வெளியிடப்படும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்லமுடியும்.

எப்போது ட்ரெய்லர் ரிலீஸ் ஆனாலும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். சரியான தருணத்தில் ட்ரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள். அதில் வரும் ஒரு டயலாக் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும். எனவே ட்ரெய்லர் வெளியாகும்வரை காத்திருப்போம் என தெரிவித்துள்ளார் .