பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று பாதிப்பு? தனிமைப்படுத்திக்கொண்டார்..

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பங்களா விற்குள் லேயே இருக்கும் பிரபலங்களும் தப்ப முடியவில்லை. சமீபத்தில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என குடும்பமே கொரோனா தொற்றுக்குள்ளானர்கள். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

இந்நிலையில் பிரபல நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்களாம்.
ஐஸ்வர்யா தமிழில் பட்டத்து யானை. சொல்லிவிடவா என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.
அர்ஜுன் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளார் களா? இல்லையா ? என்பது இன்னும் தெரியவில்லை.