இந்திய கிரிக்கெட் அணியில் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் இடம்பிடித்தார்

டில்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். கிரிக்கெட் அதிக ஆர்வம் கொண்ட அர்ஜூன் டெண்டுல்கர் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தார். அர்ஜூனுக்கு இப்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி இலங்¬க்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தந்தை போலவே அர்ஜூனும் இந்திய கிரிக்கெட் அணியில் சாதனை படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.