அர்ஜூன் டெண்டுல்கர் கைப்பெற்றிய முதல் சர்வதேச விக்கெட்

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் சர்வதேச அளவில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அர்ஜுன் டெண்டுல்கர் வீழ்த்திய முதல் சர்வதேச விக்கெட்டை பார்த்த சச்சினின் நண்பர் பாரட்டு மழை பொழிந்துள்ளார்.

Arjun

சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்று, இலங்கையில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். அர்ஜுன் டெண்டுல்கருக்கு இதுதான் முதல் சர்வதேசப் போட்டியாகும்.

இந்த போட்டிகள் கொழும்பில் உள்ள நாண்ட் ஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடந்து வருகிறது. செவ்வாய் கிழமை காலை தொடங்கிய போட்டியின் உணவு இடைவேளைக்குள் 5 ஓவர்கள் வரை அர்ஜூன் டெண்டுல்கர் பந்துக்களை வீசினார். இதில் அவர் 18 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இலங்கை வீரர் கமில் மிஷாரா தான் சர்வதேச அளவில் அர்ஜூன் டெண்டுல்கர் கைப்பற்றிய முதல் விக்கெட் ஆகும்.

இதனை அறிந்த சச்சின் டெண்டுல்கரின் பள்ளிப்பருவ நண்பரான வினோத் காம்ப்ளி டிவிட்டரில் அர்ஜூன் டெண்டுல்கரை வாழ்த்தியதுடன், புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள நான்ட் ஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சச்சின் மகன், அர்ஜுன் டெண்டுல்கருக்கு இதுதான் முதல் சர்வதேசப் போட்டியாகும்.

இன்று காலை போட்டி தொடங்கி உணவு இடைவேளைக்குள் 5 ஓவர்கள் வரை அர்ஜுன் டெண்டுல்கர் வீசினார். இதில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை அர்ஜுன் டெண்டுல்கர் கைப்பற்றினார். இலங்கை வீரர் கமில் மிஷாரா விக்கெட் அர்ஜுன் டெண்டுல்கருக்கு முதல் சர்வதேச விக்கெட்டாக அமைந்தது.

இந்தச் செய்தியை அறிந்ததும், சச்சின் டெண்டுல்கரின் பள்ளிப்பருவத் தோழரான வினோத் காம்ப்ளி ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் அர்ஜுன் டெண்டுல்கரை வாழ்த்தி, புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

வினோத் காம்ப்ளி பதிவில், “ அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் சர்வதேச விக்கெட்டைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நான் அர்ஜுனை சிறுவயதில் இருந்து பார்த்து வருகிறேன், அவரின் கடின உழைப்பையும் பார்த்திருக்கிறேன். இதைக் காட்டிலும் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் வேறு இல்லை.

இது தொடக்கம்தான் அர்ஜுன். கிரிக்கெட்டில் இன்னும் அதிகமான வெற்றிகளையும், சதங்களையும், விக்கெட்டுகளையும் எடுக்கும் காலம் வரும். உன்னுடைய சர்வதேச முதல் விக்கெட்டுக்கு எனது வாழ்த்துகள் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-