பந்து வீச்சில் எதிரணியை மிரட்டும் அர்ஜூன் டெண்டுல்கர்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் பந்து வீச்சில் அசத்தி வருகிறார். இவர், 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் பங்கேற்று 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

sachin

19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெஹார் டிராபி போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பங்கெற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், பந்து வீசிய அர்ஜூன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, முதல் இன்னிங்சில் 453 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி, மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், 9 விக்கெட்டுக்கு 394 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சில் அதிரடி காட்டிய அர்ஜூன் 5 விக்கெட்டுகளை எடுத்து டெல்லி அணியை மிரட்டினார். தந்தை சச்சின் பேட்டிங்கால் எதிரணியை மிரட்ட, மகன் பவுலிங் மூலம் அசத்துக்கிறார் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மும்பை மைதானத்தில் இலங்கை அணி வீரர்கள் பயிற்சி எடுத்தப்போது அவர்களுக்கு பவுலிங் செய்த் அனுபவம் அர்ஜூனிடம் உள்ளது. அதுமட்டுமின்றி, தனது தந்தையை போலவே அர்ஜூனும் மும்பை மைதானத்தின் ஆடுகளத்தை நன்கு புரிந்து வைத்துள்ளார் என்பதே இந்த வெற்றிக்கு காரணம்.