எல்லையில் எதையும் சந்திக்க ஆயுதப்படைகள் தயாராக உள்ளன: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்

டெல்லி: எல்லையில் எதையும் சந்திக்க இந்தியா ஆயுதப்படைகள் தயாராக இருப்பதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் கலந்து கொண்டார். மத்தியில் 2வது முறையாக பாஜக பதவியேற்ற பிறகு, அமைக்கப்பட்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில், ராகுல் முதன்முறையாக பங்கேற்றார்.

கூட்டத்தில் எம்.பி.,க்களிடம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்ததாவது: எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தற்போதைய நிலையை மாற்ற சீனா செய்யும் எந்த முயற்சிகளையும் முறியடிக்கப்படும்.

அதற்காக இந்திய ஆயுதப்படைகள் தயாராக உள்ளன. எல்லையில், சீன படைகள் தவறாக எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  படையினர் உஷாராக உள்ளன என்று கூறினார்.