ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: அசாம் மாநில அரசு நடவடிக்கை

கவுகாத்தி:

சாமில் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தி  ஆயுதப்படை சிறப்பு அதிகாரத்திற்கான சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து  மாநில அரசு நடவடிககை எடுத்து உள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அசாம் மாநிலத்தில் பாஜக, அசாம் கனபரிஷத் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பாஜகவை சேர்ந்த சர்பானந்த சோனோவால் உள்ளார். அங்கு  சமீபத்தில் வெளியான தேசிய குடிமக்கள் பதிவேடு சர்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்  தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் சுமூகமாக நடைபெறும் வகையில்,  ஆயுதப்படை சிறப்பு அதிகாரத்திற் கான சட்டம்  மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) 40 லட்சம் பேரின் பெயர்கள் விடு பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது வரைவு பட்டியல் மட்டுமே இறுதிப்பட்டியல் அல்ல என்று விளக்கம் அளித்த  உள்துறை அமைச்சகம், உண்மையான இந்திய குடிமக்கள் பட்டியலில் விடுபட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கில்,  உச்சநீதிமன்றமும்  மறுஆய்வு நடத்துமாறு மத்திய அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.

இந்த  நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேம்படுத்தும் நடைமுறைகள் அசாமில் மீண்டும் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து  இந்த ஆண்டு இறுதியில், அசாம் குடிமக்கள் பதிவேடு பட்டியல் இறுதி பட்டியல் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அசாமில் ஆயுதப்படையினருக்கு வழங்கப்படும் சிறப்பு சட்டத்தை  ((AFSPA) ) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அசாம் அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்த மாநிலவும் பதட்டமான பகுதி என்று அறிவித்து இந்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.

நாட்டில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும் பகுதிகளில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டது ஆயுதப்படை சிறப்பு சட்டம். இந்த சட்டத்தின் வாயிலாக  ஆயுதப்படை காவலர்களுக்கு  கூடுதல் அதிகாரங்களை வழங்கப்படுகிறது.

அதன்படி, பொது ஒழுங்கை பரமாரிக்கும் பொறுப்பு அளிக்கப்படுவதுடன், எவரையும் கைது செய்யவும் எப்பகுதியிலும் சோதனை நடத்தவும் ஆயுதப்படையினருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக அவ்வப்போது  சர்ச்சைகளும் எழுப்படும் நிலையில், அசாமில் இந்த சட்டத்தை மேலும் 6 மாநிலங்களுக்கு மாநில அரசு நீட்டித்து உள்ளது.