ரஷ்யாவில் இந்தியா, பாகிஸ்தான், சீன ராணுவ வீரர்கள் ஆகஸ்டில் கூட்டு பயிற்சி
டில்லி:
இந்தியா, பாகிஸ்தான், சீனா ராணுவத்தினர் இணைந்து அடுத்த மாதம் ரஷ்யாவில் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை அமைதி மிஷன் 2018 என்ற இந்த நிகழ்வு ரஷ்யாவின் தெற்கு உரால்ஸ் பகுதியில் உள்ள செபார்குல்ஸ்கை ஏரிக்கரையில் நடக்கிறது. இதற்காக இந்தியாவின் ராஜ்புட் 5வது பட்டாலியனில் இருந்து 200 வீரர்கள், சில இந்திய விமானப் படை வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 விமானங்கள் மூலம் ரஷ்யா செல்கின்றனர்.
மேலும், ரஷ்யா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கசகஸ்தான் வீரர்களும் என மொத்தம் சுமார் 3 ஆயிரம் துருப்புகள் கலந்தகொள்கின்றனர். இதேபோன்ற பயிற்சி 2014ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.