ரஜினி, விஜய், அஜித், சிரஞ்சீவி, ஆமிர் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், கமல் படம் மட்டும் இன்னும் இயக்கவில்லை.

இது குறித்து பேட்டி ஒன்றில் :-

“கமல்ஹாசனை நினைத்தால் எனக்குப் பயமே உண்டு, ஏனென்றால் அவரை வைத்துப் படம் இயக்கும் அளவுக்கு எனக்கு அறிவுண்டா என்று யோசிப்பேன். இந்த நூற்றாண்டின் அற்புதக் கலைஞன் அவர். பல இயக்குநர்களுக்கு அவர்கள் வாழ்வின் சிறந்த படம் என்பது கமலுடன் தான் இருக்கும்.

கமலுடன் இணைந்தால் அது சிறந்த படமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் வேடிக்கை மட்டும் பார்ப்போம் என்று அமைதியாக இருக்கிறேன். கண்டிப்பாக அவருடன் ஒரு படம் எடுப்பேன் என்று நம்புகிறேன். அது என் வாழ்வில் சிறந்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார் .