காஷ்மீர்: கடத்தி கொல்லப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு பிபின் ராவத் நேரில் ஆறுதல்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப். காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.

புல்வாமா மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவரை என்கவுண்டரில் வீழ்த்திய ராணுவ குழுவில் அவுரங்கசீப்பும் இடம்பெற்றிருந்தார்.

அவுரங்கசீப் ரம்ஜான் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு சென்றார். அப்போது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி முனையில் அவரை கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அவுரங்சீப்பின் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலை புல்வாமா மாவட்டத்தின் குசோ பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

இந்நிலையில் புல்வாமாவுக்கு ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இன்று சென்றார்.  அவுரங்கசீப்பின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.