ஜம்மு:

காஷ்மீரில் ராணுவத்தினர் மீது தாக்குதல் உள்ளூர்வாசிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘ காஷ்மீர் பல்லத்தாக்கு பகுதிகளில் உள்ளூர்வாசிகள் தாக்குதல் நடத்தியதில் இற ந்துள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது போன்று ராணுவத்துக்கு எதிரான செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன் பாரமுல்லா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியபோது, உள்ளூர்வாசிகள் 3 வீரர்களை கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் 3 பேர் இறந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கிருந்த தீவிரவாதி ஒருவர் தப்பி ஓடிவிட்டான். இதன் பிறகு தான் தளபதி இது போன்றதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘உள்ளூர்வாசிகள் கல்வீசி தாக்குதல் நடத்தும் போது தீவிரவாதிகள் எதிர் தாக்குதல் நடத்த வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பாகிஸ்தான் கொடிகளை ஏந்துபவர்கள் தேச விரோத ச க்திகளாக அடையாளம் காணப்படுவார்கள். இன்று வேண்டுமானால் நீங்கள் தப்பித்துவிடலாம். ஆனால் நாளை அவர்கள் சிக்கிவி டுவார்கள். இடைவிடாத தாக்குதல் தொடரும்’’ என்று தீவிரவாதிகளின் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராவத் மேலும் கூறுகையில், ‘‘தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதையும், ராணுவ நடவடிக்கையை தடுக்க முயற்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு அளித்தால் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க வாய்ப்பாக அமையும். இல்லை என்றால் பாதுகாப்பு படை வீரர்கள் கடுமையாக நடந்து கெ £ள்வார்கள். தற்போதுள்ள நிலையை அவர்கள் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளோடு இடைவிடாத தாக்குதல் தொடரும்’’ என்று கூறினார்.

இரண்டு இடங்களின் தனித்தனியாக நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 3 வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற பிறகு ரவாத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.