டில்லி

ராணுவ தலைமை அலுவலகத்தில் பணி புரியும் வீரருக்கு கொரோனா பாதிப்பு உளதால் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.  தற்போது 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிகரித்து அதில் 2600க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  இந்த கொரோனா தொற்று வரிசையில் டில்லி நான்காம் இடத்தில் உள்ளது.

டில்லியில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.   இந்த மாத தொடக்கத்தில் ராணுவத்தைச் சேர்ந்த 74 பேர் பாதிப்பு அடைந்ததாக செய்திகள் வெளியாகின.  இவர்களில் இதுவரை 42 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   கடந்த புதன்கிழமை அன்று ஒரு ராணுவ அதிகாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார்.

தற்போது டில்லியில் உள்ள ராணுவ தலைமையக அலுவலகத்தில் பணி புரியும் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இதையொட்டி அவர் பணி புரிந்த பகுதி முழுவதுமாக மூடப்பட்டு கிருமி நாசினி மூலம் சுத்திகரிக்கபடும் பணி நடந்து வருகிறது.  அத்துடன் அந்த வீரருடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது,