ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 2வீரர்கள் பலி!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

bomb

ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டையில் உள்ள நவ்ஷேரா பகுதியில் வழக்கம் போல் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் சிலர் ராணுவ வீரர்களை நோக்கி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 2 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.