தமிழர் வாழும் பகுதிகளில் மீண்டும் ராணுவம்! அவசர சட்டத்தை பிறப்பித்த கோத்தபய ராஜபக்சே

கொழும்பு:

லங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் உட்பட பல இடங்களில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்த, ராணுவம் ஏந்திய ஆயுதப்படையினர் பணியில் ஈடுபடும் வகையில், அவசர சட்டத்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பிறப்பித்து உள்ளார்.

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி பெற்று ஜனாதிபதி பதவியை கைப்பற்றி உள்ளது. தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சேவின் சகோதரர கோத்தபய நாட்டின் அதிபராக பதவி ஏற்றுள்ளார். அவர் பதவி ஏற்கும்போதே, தனக்கு தமிழ்மக்கள் வாக்களிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதைத்தொடர்ந்து நாட்டின் பிரமர் பதவியையும், அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே கைப்பற்றி உள்ளார். நேற்று கோத்தபய அரசின் அமைச்சரவை பதவி ஏற்றது. 16 பேரை கொண்ட புதிய அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது.

இந்த நிலையில், தமிழர் வாழும் பகுதிகள் உட்பட பல இடங்களில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்த, ராணுவம் ஏந்திய ஆயுதப்படையினர் பணியில் ஈடுபடும் வகையில், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பணியில் ஈடுபடும் வகையில் அவசர சட்டத்தை பிறப்பித்தார், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பிறப்பித்து உள்ளார்.

இது தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சிறிசேனா தலைமையிலான ஆட்சியின்போது, அங்கு வாழும் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத நிலை நீடித்து வந்த நிலையில், தற்போது கோத்தபய மற்றும் ராஜபக்சே குடும்பத்தினர் கைகளில் ஆட்சி அதிகாரம் வந்துள்ளது, தமிழக மக்களிடையே கடும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.