டில்லி,

பிரபல பத்திரிகையாளரான  அர்னாப் கோஷ்வாமி இணைதலைவராக உள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ‘ஆப்’ கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து திரும்ப பெறப்பட்டது.

பாரதியஜனதா அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ரிபப்ளிக் டிவி, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது. இதன் காரணமாக அதன் விளம்பர வருவாய் பெரிதும் சரிவை சந்தித்து.

இதற்கிடையில், கேரள மாநிலம் குறித்து பல்வேறு செய்திகளை அரசுக்கு எதிராக வெளியிட்டு வந்தது. கேரள மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, தனது டிவி ஆப்-ஐ பிளே ஸ்டோரில் இருந்து திரும்ப பெற்றுள்ளது.

அர்ணாப் கோஸ்வாமியை எடிட்டராக கொண்ட ரிபப்ளிக் டிவி சேனல், தொடர்ந்து, எதிர்க்கட்சி களையும், பாஜக அரசுக்கு எதிராக விமர்சனங்களை செய்வோரையும் மட்டும் குறி வைத்து செய்திகளை ஒளிபரப்பி வருகிறது. இதனால், அது பாஜக சார்பில் மறைமுகமாக இயக்கப்படும் சேனல் என்ற கெட்ட பெயரை மக்களிடம் சம்பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தாக்கப்பட்டார்கள் மேலும் சில தலைவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

இதனால் கேரளாவில் சட்ட ஒழுங்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டது.  கேரளாவில் தீவிரவாத அமைப்புகள் செயல்படுவதாகவும், அங்கு பாஜக மற்றும் சங்கபரிவார அமைப்புகளுக்கு எதிராக பல தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர் எனவும் செய்தி ரிபப்ளிக் டிவியில் செய்தி தொடர்ந்து வெளியிடப்பட்டது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து மௌனம் சாதிப்பதாக வும், சங்கப்பரிவார அமைப்புகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக வும் கருத்துக்கள் வெளியிட்டு,  கேரள மாநிலத்தை பயங்கரவாத மாநிலமாக சித்தரிக்க முயற்சி செய்தது.

இது கேரள மக்களிடைய பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதன் காரணமாக கேரள மக்க்ள் ரிபப்ளிக் (Republic) தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தையும், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மொபைல் அப்பையும் மிகக் குறைவாக மதிப்பீடுகளை வழங்க ஆரம்பித்தனர்.

இதைத்தொடர்ந்த அந்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. (TRP) ரேட்டிங் மிகவும் குறைய ஆரம்பித்தது. இதனால் அந்த தொலைக்காட்சியின் வருமானம் மிகவும் குறைய ஆரம்பித்தது.

இதனால் ரிபப்ளிக் தொலைக்காட்சி ‘ஆப்’ஐ  கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து திரும்ப பெற  ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அந்த ‘ஆப்’  நீக்கப்பட்டது.

கேரளாவை தேவையின்றி  சீண்டியதால் கடும் நஷ்டத்தை சந்தித்த ரிபப்ளிக் தொலைக்காட்சி தற்போது கடும் நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது.

அர்னாப்  கோஷ்வாமி,  ஏற்கனவே  டைம்ஸ் நவ் (TimesNow) தொலைக்காட்சியில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்தவர். அங்கிருந்து விலகி மோடி அரசுக்கு ஆதரவாக,  ரிபப்ளிக் என்னும் தொலைக்காட்சியை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.