தேர்தலில் சன்னி லியோன் முன்னிலை : அர்னாப் அதிரடி

மும்பை

ரிபப்ளிக் டிவி நிகழ்வில் அர்னாப் கோஸ்வாமி தேர்தலில் சன்னி லியோன் முன்னிலையில் உள்ளதாக கூறி ஆச்சரியம் ஊட்டினார்.

புகழ்பெற்ற செய்தி தொலைக்காட்சி ஊடகமான ரிபப்ளிக் டிவியின் தலைமை அதிகாரியும் முக்கிய தொகுப்பாளருமான அர்னாப் கோஸ்வாமி நிகழ்வுகளுக்கு வரவேற்பு உண்டு. அவர் கூறும் கருத்துக்களை விட இவர் போடும் கூச்சலுக்கும் கத்தலுக்கும் பல ரசிகர்கள் ரசித்து அதை நகைச்சுவை ஆக்குவார்கள்.

நேற்று அர்னாப் வாக்கு எண்ணிக்கை குறித்த செய்தியின்போது விவாத மேடை ஒன்றை நிகழ்த்தினார். அப்போது வெற்றி பெறும் வாய்ப்புள்ள வேட்பாளர்களில் சன்னிலியோனும் ஒருவர் என குறிப்பிட்டார். பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தேர்தலில் போட்டியிடாத போது அவர் எவ்வாறு வெற்றி பெறுவார் என நகைச்சுவையுடன் பதிவுகள் வெளியானது.

இந்த மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் பாலிவுட் கதாநாயகர் சன்னி டியோல் போட்டி இடுகிறார். பஜ்சாபின் குர்தாஸ்பூர் மக்களவை தொகுதியில் இருந்து போட்டியிடும் அவர் முதல் முறையாக தேர்தல் களத்தில் உள்ளார். அர்னாப் இவர் பெயருக்கு பதில் “சன்னி லியோன் ….ம்ம்ம்… சன்னி டியோல் குருதாஸ்பூரில் முன்னிலையில் உள்ளார்” என குறிப்பிட்டார்.

https://twitter.com/SunnyLeone/status/1131430846601162752?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1131430846601162752%7Ctwgr%5E393039363b636f6e74726f6c&ref_url=https%3A%2F%2Fwww.moneycontrol.com%2Fnews%2Ftrends%2Flok-sabha-election-results-2019-sunny-leone-had-the-perfect-comeback-to-arnab-goswamis-sunny-deol-name-goof-up-4010131.html

இதை பலரும் கிண்டல் செய்து டிவிட்டரில் தொடர்ந்து பதிந்தனர். இதைக் கண்ட நடிகை சன்னி லியோன் தனது டிவிட்டரில், “நான் எத்தனை வாக்குகள் முன்னிலையில் இருக்கிறேன்?” என கிண்டல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.