மொபைல் போன் பயன்படுத்தியதால் அர்னாப் கோஸ்வாமி சிறை மாற்றம்

லோஜா

ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி மொபைல் போன் பயன்படுத்தியதால் தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆர்கிடெக்ட் தற்கொலை வழக்கில் அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் ரிப்ப்ளிக் டிவி தலைமை செய்தி ஆஸ்ரீயர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்.  அவரி 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.   அதையொட்டி அவர் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

அவரிடம் இருந்த மொபைல் போன் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ஆயினும் அவர் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி உள்ளார்.    மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போது அவர் இவ்வாறு செய்ததன் மூலம் சிறையில் அவருக்கு யாரோ மொபைல் கொடுத்து உதவுவதாகச் சந்தேகம் உண்டானது.

இதையொட்டி அர்னாப் கோஸ்வாமி இன்று அலிபாக் சிறையில் இருந்து தலோஜா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  மேலும் தனி அறையில் உள்ள அர்னாபுக்கு மொபைல் போன் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

தலோஜா சிறைக்கு மாற்றப்படும் போது அர்னாப் தம்மை அலிபாக் ஜெயிலர் தாக்கியதாகவும் தமது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூச்சல் இட்டுள்ளார்.  மேலும் அவருடைய வழக்கறிஞருடன் இது குறித்துப் பேச உள்ளதாகவும் அவர் வாகனத்தில் இருந்தபடி கூச்சல் இட்டுள்ளார்.