தமிழ்நாடு : 12000 பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் வேலை இழப்பு

சென்னை

மிழகத்தில் சுமார் 12000 பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் பணி இழந்துள்ளார்கள் என அகில இந்திய தொழிற்கல்விக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 550 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  அவற்றில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவ்வாறு பொறியியல் கல்லூரிகல் தமிழகத்தில் மட்டுமே அதிக அளவில் உள்ளன.   அதே நேரத்தில் இந்த மாணவர்களுக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.    சரியான முறையில் கற்பிக்கப் படாததே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

இதை ஒட்டி அகில இந்திய தொழிற்கல்விக் கழகம் ஆசிரியர்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நிகழ்த்தியது.  அந்த கணக்கெடுப்பின் முடிவில், “தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 1: 15 என்னும் விகிதத்தில் ஆசிரியர்கள் இருந்தனர்.   அதன்படி தற்போது  உள்ள எண்ணிக்கைப் படி மொத்தம் 66000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புரிய வேண்டும்.   ஆனால் உண்மையில் 55000 ஆசிரியர்கள் கூட பணி புரியவில்லை.   அதாவது சுமார் 12000 ஆசிரியர்கள் வேலை இழந்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த வருடம் மே மாதம் பணி இழந்த ஒரு ஆசிரியர், “எனது சேமிப்பை வைத்து நான் இப்போது வாழ்க்கை நடத்தி வருகிறேன்.   இங்குள்ள பொறியியல் கல்லூரிகளில் வேலை காலி இல்லை.  ஆந்திராவில் உள்ள கல்லூரிகள் இந்த வேலை இல்லா திண்டாட்டத்தை ப்யன் படுத்தி பாதிக்கும் குறைவான சம்பளத்தில் ஆசிரியர்களை பணி அமர்த்துகின்ரனர்.   இதற்கு இடைத் தரகர்கள் உள்ளனர்.  அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20% கமிஷன் அளிக்க வேண்டி உள்ளது” என கூறுகிறார்.

அத்துடன் தற்போது அதிக ஊதியம் வாங்கும் பழைய ஆசிரியர்களை  நீக்கி விட்டு குறைந்த ஊதியத்தில் புதிய ஆசிரியர்களை பல கல்லூரிகள் நியமித்து வருகின்றன.   வேலை இல்லா திண்டாட்டத்தினால் இதற்கு பலர் ஒப்புக் கொள்ளுகின்றனர்.

இது குறித்து கல்லூரி உரிமையாளர் ஒருவர், “மற்ற கல்லூரிகளில் ஒவ்வொரு ஆசிரியரும் வாரத்துக்கு 20 மணி நேரம் பாடம் நடத்துகின்றானர்.  ஆனால் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் 8 மணி நேரம் மட்டுமே பாடம் நடத்துகின்றனர்.   இதனால் எங்கள் செலவில் 70% ஆசிரியர்களின் ஊதியத்துக்கு செலவாகிறது.   எங்களிடம் போதுமான மாணவர்கள் இல்லாத போது ஆசிரியர்களை நாங்கள் ஏன் அதிக அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.