நாடெங்கும் சுமார் 1500 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை : மக்களவையில் அரசு தகவல்

டில்லி

ற்போது நாடெங்கும் சுமார் 1500 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளதாக அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

சிவில் சேவை அதிகாரிகள் என அழைக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் நேரடி தேர்வில் முதல் கட்டமாக மாநில வாரியாக எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.  அதன் பிறகு மத்திய ஊழியர் தேர்வு ஆணையம் இவர்களுக்கு நேர்முகத தேர்வு நடத்தி இரண்டாம் கட்ட தேர்வை முடிக்கிறது.   அதன் பிறகு இவர்கள் துறையில் பயிற்சி பெறுகின்றனர்

தற்போதுள்ள ஐ ஏ எஸ் அதிகாரிகள் எண்ணிக்கை குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அரசு எழுத்து மூலம் பதில் அளித்துள்ளது.  அந்த பதிலில், “இந்த வருடம் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 5205 ஐ ஏ எஸ் அதிகாரிகள் உள்ளனர்.    மொத்த அதிகாரிகளின் தேவை 6699 ஆக உள்ளது.   எனவே தற்போது  1484 அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது.

இந்த அதிகாரிகள் தேவைக்காக அரசு வருடாந்திர ஐஏஎஸ் அதிகாரிகள் நேரடி தேர்வுக்கான எண்ணிக்கையை  வருடத்துக்கு 55 லிருந்து 180 ஆக அதிகரித்துள்ளது  அத்துடன் பணி உயர்வு மூலம் ஐ ஏ எஸ் தகுதி பெற உள்ள ஊழியர்களுக்கும் விரைவில் பணி உயர்வு அளிக்க உள்ளது.   இதன் மூலம் விரைவில் இந்த பற்றாக்குறை சரி செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி