உள்நோக்கத்துடன் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர் மீது கடும் நடவடிக்கை- மத்திய அரசு

டெல்லி,

இந்தியாவில் உள்நோக்கத்துடன் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர்  கிரண் ரிஜ்ஜூ, விசா காலம் முடிந்தும்  36 ஆயிரத்து 310 பாகிஸ்தானியர்கள் இந்தியாவிலேயே தங்கியிருப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவிலிருக்கும் பாகிஸ்தானியர்களின் விசாகாலம் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி முதல் 2015 ம் ஆண்டு டிசம்பர் 31 வரை விசா பெற்ற 48,510 பாகிஸ்தானியர்களில் 25 சதவிதத்தினர் அதாவது 12 200 பேர் 2015 முடிவில் பாகிஸ்தானுக்கு   திருப்பி அனுப்ப பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மீதமுள்ள 36 ஆயிரத்து 310 பேர் விசா முடிந்தும் இந்தியாவிலேயே முகாமிட்டிருப்பதாக அவர் கூறினார்.  உள்நோக்கம் இல்லாமலும், விசா காலம் முடிந்தும் அது தெரியாமல் இந்தியாவில் வசிப்போரிடம் தங்கியிருந்த காலத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்றார் அவர்.

அதேநேரம் விசா முடிந்து உள்நோக்கத்துடன் இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர் உள்பட வெளிநாட்டுக் காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரிஜ்ஜூ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.