வாக்காளர் பட்டியலில் இருந்து 6லட்சம் பேர் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை:

மிழகம் முழுவதும் 1ந்தேதி வெளியான வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 6 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் (5,77,186) நீக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த ஆகஸ்டு 31ந்தேதி அனைத்துக்கட்சி தலைவர்களுடன் தமிழக தேர்தல் ஆணையாளர் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து  5,77,186 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து வேறு இடம் மாறியவர்கள் அதுகுறித்த தகவல்களை தெரிவிக்காத நிலையில் அவர்களது பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்கள், இருமுறை பதிவானவர்களின் பெயர்கள் அனைத்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

புதிதாக சேர விரும்புபவர்களுக்காக  சிறப்பு வாக்காளர் முகாம் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7, 14 போன்ற தேதிகளின் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பெயர் விடுபட்டவர்கள் மனு கொடுத்து மீண்டும் தங்களது பெயரை இணைத்துக்கொள்ளலாம்.

இறுதி வேட்பாளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்கள் லட்சக்கணக்கில் இருப்பதாகவும், அவர்களை கண்டுபிடித்து நீக்க வேண்டும் என்று திமுக சார்பில் ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுமார் 6 லட்சம் பேர் பெயர் நீக்கப்பட்டுள்ளது.