சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்….!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ம் தேதி போதை மருந்து பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் தற்போது தமிழக அரசின் காவல்துறையினருடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றைத் தயாரித்து, அவருடைய யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

போதை பொருட்களை உபயோகிப்பதால் நடக்கும் கொடூர குற்றங்கள், வன்கொடுமை, சிறுவர்களின் வாழ்கை சீரழிவு உள்ளிட்ட பல விளைவுகளை தடுக்க போதை பொருட்களை ஒழிப்போம்,

இளைய தலைமுறையை காப்பாற்றுவோம் என ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்வோம்” என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.