சட்டசபையை உடனே கூட்டுக! சபாநாயகரிடம் ஸ்டாலின் மனு

சென்னை,

மிழக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளார்.

திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகம் வந்து சபாநாயகரிடம் சட்டசபையை உடனே கூட்ட வலியுறுத்தி மனு கொடுத்துளார்.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று சட்டசபை சபாநாயகர்  தனபாலை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

அந்த மனுவில்,  சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்றும், தமிழகத்தின் தற்போதைய சூழல், விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும். எனவே சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று கோரியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.

You may have missed