காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற உத்தரவுபடி ஏற்பாடுகள் நடைபெறுகிறது: யு.பி.சிங்

டில்லி:

காவிரி நீர் பிரச்சினையில்,  சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு காவிரி நீர் தொடர்பாக வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 3ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்  இன்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

காவிரி கண்காணிப்புக்குழு, உச்சநீதி மன்ற உத்தரவுப்படி  நீர்ப் பகிர்வு ஏற்பாடுகளை செய்து வருகிறது என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு இடையே நீர்பங்கீட்டு சட்டத்தின் 6 ஏ பிரிவின்படி தான் திட்டம் வகுக்கப்படும் என்றும்,  காவிரி நீர் விவகாரத்தில் அமைப்பின் பெயர் எதுவாக இருந்தாலும் பிரச்சினை  இல்லை. வாரியமோ அல்லது வேறு எதுவாகவோ இருந்தாலும் அதில் பிரச்சினை இல்லை என்ற அவர், இதில் இந்த விவகாரம், அவரவர் மாநில நலன் பார்வையில் பார்க்கப்படுவதாக கூறினார்.

ஆனால், மத்திய அரசு, காவிரி பிரச்சினையை   கூட்டாட்சி அடிப்படையில் மட்டுமே  பார்க்கிறது எனறவர், நடுவர் மன்ற உத்தரவை இணைத்தே தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது என்றும் கூறினார்.

மேலும், ஸ்கீம்’ வகுக்குமாறு மத்திய அரசை கோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது என்று கூறியவர், எது சிறந்ததோ அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Arrangements are made by Supreme Court order in the Cauvery case: says Central Water Resources Secretary U.P.Singh, காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற உத்தரவுபடி ஏற்பாடுகள் நடைபெறுகிறது: யு.பி.சிங்
-=-