இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பிடிவாரண்டு!

கொல்கத்தா:

ந்திய கிரிக்கெட்டின் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி தொடர்ந்துள்ள வழக்கில், ஷமிக்கு கொல்கத்தா நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின்  வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான், ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பிருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் ஹசின் ஜகான் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து  கொல்கத்தா போலீஸில் புகாரும் அளித்திருந்தார்.

இதற்கு ஷமி மறுப்பு தெரிவித்திருந்தார்.  இது தொடர்பான வழக்கு கொல்கத்தா அலிபூர் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இநத் வழக்கில் ஷமி ஆஜராக பல முறை உத்தரவிட்டும் அவர் ஆராஜகாத நிலையில், வழக்கின்  விசாரணையின்போது,  ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமதுவிற்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும்15 நாட்களுக்குள் ஷமி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார் ஷமி. இந்த தொடர் முடிவடைந்ததும், இந்தியா திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும், அதே வேளையில், அவரை கைது செய்ய கொல்கத்தாக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.