1898-ம் ஆண்டு அன்று இந்தியாவோடு இணைந்திருந்த இன்றைய பாகிஸ்தானில் ஒரு அப்பாவி ஆலமரம் செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு 118 ஆண்டுகளாக சிறைபட்டிருக்கிறது.  நீதி கிடைக்குமா? என இன்றுவரை ஏங்கிக்கொண்டிருக்கிறது.
கீழே சொல்லப்படும் கதையைப் படித்து உங்களுக்கு சிரிப்போ வெறுப்போ வந்தால் கம்பேனி பொறுப்பாகாது.
1898-ஆம் ஆண்டு லண்டி கோட்டல் ஆர்மி கண்டோன்மெண்டில் நடந்த உண்மை சம்பவத்தை உங்களுக்கு அப்படியே தருகிறோம்.
alamaram
இக்கதையின் கதாநாயகன் ஜேம்ஸ் ஸ்குயிட் என்ற இராணுவ அதிகாரி. மண்டையைப் பிளக்கும் மத்தியான வெயிலில் அரைப் போதையில் இருந்த அந்த ஆபீசருக்கு இந்த ஆலமரம் தன்னை அடிக்க வருவதுபோல தோன்றியிருக்கிறது.
ஆடிப்போன அதிகாரி ஆத்திரம் மேலிட தனது அடியாட்களைக் கூப்பிட்டு “அர்ர்ர்ரெஸ்ட்ட் ஹிம்” என்று கத்தியிருக்கிறார். அவ்வளவுதான் இந்த ஆலமரம் ஒரு நூற்றாண்டையும் தாண்டி இன்றுவரை கைதியாக நிற்கிறது.
இது ஒரு பக்கம் காமெடியான கதையாகத் தோன்றினாலும், இரு நூற்றாண்டுகள் நீடித்த ஆங்கில முடியாட்சியின் கொடுமையை பறை சாற்றும்  அடையாளச் சின்னமாக இந்த மரம் விளங்குவதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் வந்து இந்த மரத்தைப் பார்த்துச் செல்லுகின்றனர்.