Random image

கடன் செலுத்த தவறியோரை கைது செய்தால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் : நிதின் கட்காரி

டில்லி

டன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாக தொழிலதிபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பொருளாதாரமும் வர்த்தகமும் வீழ்ச்சி அடையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திரும்ப செலுத்தாத தொழிலதிபர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், மற்றும் தனியார் வங்கிகளில் வாராக்கடன்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அவ்வாறு திருப்பி செலுத்தாதவர்கள் மீது வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.    அப்படி இருந்தாலும் வாராக்கடன்கள் குறையாமல் இருக்கிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, “ஒரு தொழிலதிபர் கடன் வாங்குவது தனது வர்த்தக முன்னேற்றத்துக்காகத் தான் என்பதை வங்கி அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும்.    அவர்கள் கடனை திருப்பி செலுத்தாவிட்டால்  அவர்களிடம் அதற்கான காரணங்களை கேட்டறிய வேண்டும்.   அது தான் ஜனநாயக முறை ஆகும்.

ஜனநாயக முறைப்படி எதிராளியின் வாதத்தை கேட்காமல் நடவடிக்கை எடுப்பது தவறாகும்.   அவ்வாறு நடவடிக்கை எடுப்பதால் அந்த வர்த்தகம் நின்று போகும்.   அதனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்.    அது மட்டுமின்றி இந்த நடவடிக்கைகளுக்கு பயந்து தொழிலதிபர்கள் எந்த ஒரு புதிய முயற்சியையும் செய்ய அஞ்சும் நிலை உண்டாகும்.

அவ்வாறு திருப்பி தராதவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக: ஒரு அளவுக்குள் இருந்தாக வேண்டும்.    அதை விடுத்து ஒரு தொழில் நிறுவனத்தின் மேல் அதிகாரிகள் அல்லது உரிமையாளர்களை கடனை திருப்பி தராததற்காக கைது செய்வது மிகவும் தவறாகும்.     தவிர திருப்பித் தராதற்கான காரணங்கள் உண்மையாக இருப்பின் அவரை மன்னிக்க வேண்டும்”  என கூறி உள்ளார்.