கர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், `மத்திய அரசின் தோல்வியடைந்த கொள்கைகளால், 2வது கொரோனா அலை மிக தீவிரமாக பரவி வருகிறது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்aகள் மீண்டும் புலம் பெயரும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவதை அதிகரிப்பதுடன், மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரத்துக்காக மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்.

ஆனால், இந்த கர்வம் பிடித்த அரசு நல்ல பரிந்துரைகளை ஏற்று கொள்வதில்லை,’’ என்று கூறியுள்ளார்.