திரையுலக அனுபவத்தினை ‘தித்திக்கும் நினைவுகள்’ என புத்தகமாக வெளியிட்ட ஏ.ஆர்.எஸ்…!

திரைப்பட நடிகரான ஏ.ஆர்.எஸ் என்கிற ஏ.ஆர்.சீனிவாசன், தனது மேடைநாடக மற்றும் திரையுலக அனுபவத்தினை ‘அமுதசுரபி’ மாத இதழியில் தொடராக எழுதி வந்தார்.

தற்போது அதை ‘தித்திக்கும் நினைவுகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். நல்லி குப்புசாமி செட்டி புத்தகத்தை வெளியிட, அமுதசுரபி மாத இதழியின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

சி.வி.சந்திரமோகன் தொகுத்து வழங்க , ஏ.ஆர்.எஸின் மகன் ஜெய் நன்றியுரையாற்ற , இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகைகள் சச்சு, ராஜஸ்ரீ, காஞ்சனா, நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, டிவி.வரதாரஜன், காந்தன், பக்தி சரண், கல்வியாளர் ஓய்.ஜி.பி, வீணை வித்வான் ரேவதி கிருஷ்ணா, எஸ்.வி.ரமணன் மற்றும் ஏராளமான மேடைநாடகக் கலைஞர்கள், திரையுலகினர்கள், எழுத்தாளர்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர் .