எஃப்ஏ கோப்பை கால்பந்து – சாம்பியன் ஆனது ஆர்சனல் அணி!

--

லண்டன்: எஃப்ஏ கோப்பை கால்பந்து தொடரில், ஆர்சனல் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

செல்சி அணியுடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆர்சனல் அணியானது 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

உள்ளூர் அணிகள் பங்கேற்ற எஃப்ஏ கோப்பை கால்பந்து தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வந்தது. இத்தொடரில். ஆர்சனல் அணி வென்றதன் மூலம், இக்கோப்பையை அது 14வது முறையாக வெல்கிறது.

கடைசியாக 2017ம் ஆண்டு அந்த அணி கோப்பை வென்றிருந்தது. இத்தொடரில், நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய மான்செஸ்டர் சிட்டி அணி, அரையிறுதியுடன் வெளியேறியது.