சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் மார்ச் 12 ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் . முதல்வர் பதவியே எனக்கு வேண்டாம், என் ரத்தத்திலேயே அந்த ஆசை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறி விட்டார்.

நான் தொடங்கும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருப்பார். இதற்காக ஒரு குழுவை உருவாக்குவேன். வாக்குறுதிகளை செயல்படுத்த, ஒரு கண்காணிப்பு குழு உருவாக்குவேன். என்னால் முதல்வர் பதவியை நினைத்து பார்க்க முடியாது.நான் நல்லவரை முதல்வராக தேர்வு செய்வேன். 50 வயதுக்கு கீழ் இருக்கும் நபர்களை முதல்வராக்குவேன் என கூறியுள்ளார்

ரஜினியின் பேட்டியைப் பலரும் பலவிதமாக எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு கருத்து தெரிவித்து வருகின்றனர் .

மேலும், “மக்களிடம் எழுச்சி ஏற்பட்டவுடன் நான் வருவேன்” என்று மறைமுகமாகத் தெரிவித்தார். ரஜினியின் இந்தப் பேச்சை வைத்து சமூக வலைதளத்தில் கிண்டல் பதிவுகளும், மீம்ஸ்களும் அதிகரித்தன.

இந்தக் கிண்டல்களுக்கு கலை இயக்குநர் கிரண் தனது ட்விட்டர் பதிவில் 90 வயது வரை பதவியிலிருந்தவரைக் கேலி செய்த இந்த மண்ணில் ’70 வயசு ஆயிடுச்சி, உடம்புல பல பஞ்சர் எனக்கு ஏன்? பதவி, புதியவர்கள் வரட்டும், நான் வழி நடத்துகிறேன்” என்று நேர்மையாகச் சொன்னாலும் கிண்டல் என்றால்… யார்தான் வேண்டும் ஆட்சி செய்ய?” என்று பதிவிட்டுள்ளார்.