ஐஐடி டில்லி: முன்னாள் மாணவர் பெயரில் செயற்கை நுண்ணறிவு பிரிவு அமைப்பு

டில்லி:

லைநகர் டில்லியில் அமைந்துள்ள ஐஐடியில், புகழ்பெற்ற முன்னாள் மாணவரான சவுமித்ரா தத்தா பெயரில் செயற்கை நுண்ணறிவு பிரிவு என்ற அமைப்பு நிறுவப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

டில்லியில் செயல்பட்டுவரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.)யில்,  “சவுமித்ரா தத்தா தலைவர் செயற்கை நுண்ணறிவு” என்ற அமைப்பை நிறுவுவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், டில்லி ஐஐடி மற்றும, பேராசிரியர்கள் சவுமித்ரா தத்தா மற்றும் லூர்தஸ் காஸநோவா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பிரிவுக்காக  பேராசிரியர்கள் இருவரும் ரூ .1 கோடி நிதி உதவி அளித்துள்ளனர்.

புகழ்பெற்ற முன்னாள் ஐஐடி மாணவரான சவுமித்ரா தத்தாவை கவுரவப்படுத் தும் விதமாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பிரிவு செயல்பாட்டுக்கு வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு துறையில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் சிறப்பான மற்றும் தலைமைத்துவத்தை ஊக்கு விப்பதோடு, தொழில்துறை மற்றும் ஐஐடி-டில்லி ஆசிரியர்களும் மாணவர்களுக்குமான தொடர்பை எளிதாக்கும் என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தத்தா,  “மதிப்புமிக்க கல்விக்கு எனது பெயரை சூட்டி,  எனக்கு பெருமை  அளித்தமைக்காக, ஐஐடி டில்லியின் ஆசிரியர்களுக்கு நான் மிகவும் நன்றியுடைய வனாக இருக்கிறேன். ஐஐடி டெல்லியின் எதிர்கால கல்வி சிறந்து விளங்கு வதில் எனது பங்கும் இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று  கூறி உள்ளார்.

இந்த பிரிவு அமைக்கப்படுவது குறித்து கருத்துதெரிவித்துள்ள  லூர்தஸ் காஸநோவா,  “இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஐஐடி-டில்லியின் இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பின் பங்கு மிக முக்கியமானது’ என்று கூறி உள்ளார். இவர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரு புகழ்பெற்ற கல்வியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

வுமித்ரா தத்தா  1985 ம் ஆண்டு டில்லி ஐ.ஐ.டி-யில் பி.டெக் பட்டம் பெற்றார். அதைத்தொடர்ந்து பெர்க்லீயிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பிஎச்டி பட்டமும் பெற்றார்.

தற்போது புதுமைப்படுத்தல் குறியீடுகளில் உலகளாவிய தரநிலையாக மாறியுள்ள, சிறந்த உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை (Global Innovation Index-GII) வடிவமைப்பாளராக  இருந்து வருகிறார்.