தென்மேற்கு சீனாவின் சிச்சுவான்  என்ற பகுதியில்  10 வருடம் முன்காணாமல் போன குழந்தை கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம்   மீட்கப்பட்டு, அவர்கள் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது என்ற  காவல் துறையின் அறிவிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுநாள வரை செயற்கை நுண்ணறிவைக்கொண்டு பருவ நிலை குறித்த விபரங்களும், தானியங்கு செயல்பாடுகளும்தான் உருவாக்கப்பட்டு வந்த சூழ்நிலையில்  செயற்கத நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் காணாமல் போனவர்களையும் கண்டுபிடிக்கமுடியும் என்பது எதிர்காலத்தில் மிகப்பெரும் பயனளிக்கும்.

இந்த தொழில்நுட்பத்தினை  Tencent YouTu Lab என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது . இந்த நிறுவனத்தின் முகஅடையாளப்படுத்துதல் தொழில்நுட்பம் 99.80% மிக கச்சிதமாக பொருந்துகிறது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்த தொழில்நுட்பம் சமூகத்திற்கு பலனளிக்கும் அதே சூழ்நிலையில் நம்முடைய தனியுரிமையை பாதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

-செல்வமுரளி