மணல் சிற்பம் மூலம் விராட் கோலிக்கு பிறந்த நாள் வழ்த்து!

ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு மணல் சிற்பம் வரைந்து தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

kohli

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி வருகிறார். அந்த வகையில் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் கோலியின் மணல் சிற்பம் செய்து சுதர்சன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு தீபாவளி விழாவில் பங்கேற்க சென்ற சுதர்சன் பட்நாயக், அங்குள்ள மைதானத்தில் பேட் மற்றும் பந்துடன் கூடிய விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி, இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் 24 சதம், 19 அரைசதங்களுடன் 6,331 ரன்கள் குவித்துள்ளார். 216 ஒருநாள் போ்டடியில் 38 சதங்கள், 48 அரைசதங்களுடன் 10,232 ரன்கள் குவித்துள்ளார். 62 டி20 போட்டியில் 18 அரைசதங்களுடன் 2,102 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.