நியூஜெர்சி

மெரிக்க நடிகையும் புகைப்படக் கலைஞருமான வெண்டிகோ வளர்த்து வந்த மயில் அவருடன் விமானத்தில் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் புகழ் பெற்ற புகைப்பட கலைஞரும் மேடை நடிகையுமான வெண்டிகோ நியூயார்க் நகரை சேர்ந்தவர்.    அவர் ஒரு மயிலை டெக்ஸ்டர் என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வருகிறார்.    அந்த மயிலை பிரிய மனதில்லாததால் எங்கு சென்றாலும் அவர் அதையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம்.    வெண்டிகோ தனக்கும் தன் மயிலுக்கும் அமெரிக்காவின் நியூஜெர்சி யில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை செல்ல விமான டிக்கட் வாங்கி இருந்தார்.

ஆனால் நியுஜெர்சி நகரின் விமான நிலையத்தில் மயிலுக்கு விமானத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.   இது குறித்து விமான நிலைய அதிகாரி ஆண்டிரியா ஹில்லர், “விமானத்தில் செல்ல பிராணிகள் மற்றும் பறவைகளை அனுமதிக்க சில விதிமுறைகள் உண்டு.   அந்த மயில் அந்த விதிமுறைகளுக்குள் வரவில்லை.    அதன் உருவம்,  எடை போன்றவைகளும் அந்த விதிமுறைக்கு மாறாக உள்ளது.  இது குறித்து நாங்கள் வெண்டிகோவுகோவுக்கு அவர் விமான நிலையம் வரும் முன்பே பல முறை விவரித்து இருந்தோம்.   ஆனாலும் அவர் மயிலை உடன் அழைத்து வந்துள்ளார்.”  எனத் தெரிவித்தார்.

டெக்ஸ்டர் மயிலுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு பக்கம் உள்ளது.   அந்தப் பக்கத்தில் “நான் எனது மனித நண்பர்களுடன் சாலை மார்க்கமாக பயணம் செய்கிறேன்”  என பதிவு இடப்பட்டுள்ளது.