ஆர்டின் ஹாரோவ்டின் எல்மயன் என்பவர் கடந்த 1917ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிறந்தார். ஓட்டோமேன் சாம்ராஜ்யத்தில் கடந்த 1915 மற்றும் 1923ம் ஆண்டு நடந்த தாக்குதல்களில் இவரது தந்தை இறந்தார். அப்போது எல்மயனுக்கு வயது 21. இவர் தனது 39வது வயதில் நடந்த விபத்தில் தனது மணிக்கட்டை இழப்பதற்கு முன்பு வரை துடுப்பு டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்.

 

இந்த காயத்திற்கு பிறகு அவர் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார். இந்த விளையாட்டின் மூலம் மணிகட்டிற்கு அதிக வேலை கிடையாது என்பதாலும், அதிக ஓய்வு நேரம் இருந்ததாலும் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்.

இவர் ஒரு டென்னிஸ் கிளப்பில் இணைந்து விளையாடியதன் மூலம் 27 கோப்பைகளை வென்றார். டேனியல் பிடால்கோ என்ற பிரபலமான அர்ஜென்டினா டென்னிஸ் வீரர் கூறுகையில், ‘‘ கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவனாக இருந்த காலம் முதல் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அவரை எளிதில் வீழத்த முடியாது என்பதால் அவரை எதிர்த்து யாரும் விளையாட மாட்டார்கள். அந்தளவுக்கு அவரது விளையாட்டு இருக்கும்’’ என்றார்.

தற்போது அவருக்கு 100 வயது. செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகள் மற்றும் சமயங்களில் வார இறுதி நாட்களிலும் தனது டென்னிஸ் பேட், 4 பந்துகளை எடுத்துக் கொண்டு விளையாட சென்று விடுவார்.

‘‘நான் உதாரணமாக இல்லை என்றாலும், மக்களை விளையாட சொல்லி வலியுறுத்துவேன். எந்த வயதில் வேண்டுமானாலும் டென்னிஸ் விளையாடலாம். நான் எனது டாக்டர் பேச்சை கேட்டிருந்தால் எப்போதோ நான் விளையாடுவதை நிறுத்தியிருக்க வேண்டும்.

நான் விளையாடுவதை நிறுத்தினால் எனது தொப்பை மேலும் பெரிதாகிவிடும் என்று டாக்டரிடம் கூறினேன். என்னிடம் எவ்வித ரகசியமும் இல்லை. சரியான முறையில் உணவு உண்ண வேண்டும்’’ என்று ஆர்டின் தெரிவித்தார்.

கடந்த 2015ம் ஆண்டில் இவர் தனது 98வது வயதில் போட்டியில் கலந்துகொண்டார்.