30-ம் தேதி ஆருத்ரா தரிசனம்: கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை…

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற  சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும் அன்று மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் ஆலயத்தில் திருவாதிரை பண்டிகை கொண்டாட்டங்கள்  களைகட்டியுள்ளது. அங்கு இன்றும், நாளையும் தேரோட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 30ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. இதனைக் காண பல்வேறு மாவட்ட பக்தர்கள் வருகை புரியக்கூடும். ஆனால் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு வெளி மாவட்ட பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டவ ழக்கு காரணமாக, வெளிமாவட்ட மக்களை அனுமதிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், முகக்கவசம் அணிதல், போதிய சமுக இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கவும் கூறியுள்ளது.

இந்த நிலையில், டிசம்பர் 30ஆம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் சந்திர சேகர் சகமுரி அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 23-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் ‌‌ மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கோயில்களுக்கு பக்தர்கள் வருகை தர  வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.