ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் ஆயுட்காலம் நீட்டிப்பு

சென்னை

றைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணயத்தின் ஆயுட்காலம் மேலும் 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுக சாமியின் தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்தது. அந்த ஆணையம் பலரையும் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி விசாரணையை தொடங்கிய இந்த ஆணையத்தின் ஆயுட்காலம் 3 மாதங்களாக முதலில் நிர்ணயம் செய்யப்பட்டது.

விசாரணை அதற்குள் முடிவடையாததால் விசாரணை ஆணையத்தின் ஆயுட்காலத்தை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி இன்றுடன் ஆணையத்தின் ஆயுட்கலம் முடிவடைகிறது. இதுவரை 110 பேரிடம் விசாரணை நடத்திய ஆணையம் தனது விசாரணையை முடிக்க மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் கேட்ட்து.

அதை ஒட்டி மேலும் 4 மாதங்களுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் ஆயுட்காலத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.