புற்றுநோய் பாதிப்பு: சிகிச்சைக்காக அருண்ஜெட்லி அமெரிக்கா பயணம்!

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்துள்ள நிலையில் அருண்ஜெட்லி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Arun

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு கடந்த ஆண்டு மே மாதம் எயிம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை காரணமாக அருண்ஜெட்லி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அலுவலகத்துக்கு வராத நிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நிதிப் பொறுப்பையும் கவனித்து வந்தார்.

சிகிச்சைகள் முடிவடைந்த நிலையில் அருண்ஜெட்லி மீண்டும் தனது பணிகளை தொடர்ந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அருண்ஜெட்லி தனது சொந்த விடுப்பில் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது பணிகளை கவனிப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி மாதம் முதல் நாளில் ப்ட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில் அருண்ஜெட்லி அமெரிக்கா சென்றது ஆளும் அரசிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள்து.

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தெலுங்கானாலில் ’ரித்து பந்து’ என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உலகளாவிய அளவில் வருமான பரிமாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. மேலும், வட்டி சுமையை குறைக்கும் விதமாக விவசாயிகளுக்கு வங்கிகளில் வட்டியில்லா திட்யில்லா திட்டங்களை செயல்படுத்தவும், வருமான வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மத்திய அரசிற்கு மேலும் நெருக்கடியை ஏற்பத்தியுள்ளது.

மென்மையான திசுக்களின் ஏற்பட்ட புற்றுநோயின் தீவிரம் அதிகரிக்கவே அருண்ஜெட்லி நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. புற்றுநோயின் தீவிரம் உடல் முழுவதும் பரவியுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.