“ஏ.டி.எம்.மில் சாதாரணமாக பணம் எடுக்க இன்னும் மூன்று வாரங்கள் ஆகும்” : நிதியமைச்சர் அருண் ஜெட்லி பகீர்

டில்லி:

500 , மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்  செல்லாது என்று மத்திய அரசு திடீரென அறிவித்ததை  அடுத்து புது நோட்டுகள் வாங்க, வங்கி மற்றும் அஞ்சலகங்களில் அலைமோதி வருகிறார்கள். ஏ.டி.எம்.களிலும் நீண்ட கியூ வரிசைகள் நிற்கின்றன.

aa

பல ஏ.டி.எம்.களில் போதுமான பணம் இல்லாததாலும், நீண்ட வரிசை நிற்பதாலும் பலர் பணம் எடுக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

இரண்டு நாட்களில் நிலமை சீரடையும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் புதிய 2,000  ரூபாய்  மற்றும்  நூறு  ரூபாய்  நோட்டு மட்டுமே ஏ. டி. எம்.ல் எடுக்க  முடிகிறது.   இதனால்,  மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி,  “86 சதவிகித மக்கள் தேவையான பணத்தை மாற்றிவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.  மேலும், “சாதாரணமாக ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க இன்னும் மூன்று வாரங்கள் ஆகும்” என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

 

 

கார்ட்டூன் கேலரி