ஓய்வுக்கு பின் நிதி அமைச்சகத்தில் மீண்டும் பொறுப்பேற்றார் அருண்ஜெட்லி

டில்லி:

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் 3 மாத ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டூம் மத்திய நிதி அமைச்சகத்தில்  பொறுப்பு ஏற்றார்.

மோடி தலைமையிலான மத்திய அரசில் நிதி அமைச்சராக இருந்து வருபவர் அருண்ஜெட்லி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்யப்பட்டது. அதையடுத்து சில மாதங்களாக  ஓய்வு எடுத்து வந்தார்.

அவரது நிதி அமைச்சக பொறுப்பை மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்த நிலையில்,  தற்போது உடல்நலம் தேறிய அருண் ஜெட்லி இன்று மீண்டும் பணிக்கு திரும்பினார். இதையடுத்து, பியூல் கோயலிடம் இருந்த நிதி அமைச்சக பொறுப்பு மீண்டும் ஜெட்லியிடம் கொடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.

இந்த நிலையில் இன்று முற்பகல் 11 மணி அளவில் நிதி அமைச்சகம் வந்த அருண்ஜெட்லி மீண்டும் பொறுப்பேற்று உயர்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதித் துறை செயலர் ஹாஸ்முக் அதியா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.